உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடக்கும் திருவடி சேவை

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடக்கும் திருவடி சேவை

திருச்சி; உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா கடந்து 23ம் தேதி துவங்கியது. வரும் 1ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் மாலை தாயார் புறப்பட்டு நவராத்திரி மண்டபம் வந்தடைந்து, சிறந்பு தரிசனம் தருகிறார். விழாவில் தினமும் வெள்ளிச்சம்ப அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி பொது ஜனசேவையு நடைபெற்றது. இன்று நவராத்திரி பெருவிழா ஐந்தாம் திருநாளில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !