அன்னூர் பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
ADDED :2 days ago
அன்னூர்; அன்னூர் வட்டாரத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பழமையான அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் காலை 5:00 மணிக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. சுவாமி உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பஜனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையம் வாத பெருமாள் கோவிலில், அதிகாலையில் அபிஷேக பூஜை நடந்தது. மதியம் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் வாதப்பெருமாள் பல்லக்கில் கோவில் வளாகத்தில் உலா வந்து அருள் பாலித்தார். ஓரைக்கால் பாளையம், குன்னத்தூர், காட்டம்பட்டி, வரதையம்பாளையம், பொங்கலூர், பொகலூர், கோவில்பாளையம், கோட்டை பாளையம் பெருமாள் கோவில்களில் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.