உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்சவம்; அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி உலா

திருப்பதி பிரம்மோற்சவம்; அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி உலா

திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.29ல்) மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில், கோதண்ட ராமர் அலங்காரத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.29) மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் அலங்காரத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். அனுமன் வாகனம் என்பதால் பக்தர்கள் பலர் அனுமன் வேடமிட்டு வந்தனர். சுவாமியை பாசுரம் பாடி மாடவீதிகளில் அழைத்துச் சென்றனர். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை முழுவதும் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் நடனம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். மாலை 4 மணி முதல் 5 மணி வரை தங்க ரதத்தில் ஸ்ரீ மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு 7 மணிக்கு, கஜவாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்றைய நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ பெரிய ஜீயர்சுவாமி,ஸ்ரீ சின்னஜீயர்சுவாமி, கோவில் அதிகாரிகள் அனில் குமார் சிங்கால், பல வாரிய உறுப்பினர்கள், வீரபிரகாம், முரளி கிருஷ்ணா, மற்றும் பிற பிரமுகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !