பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
ADDED :2 days ago
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த வளவனுார் வடக்கு அக்ரஹாரம் பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் இலவச சிறப்பு தியான முகாம் நடந்தது. தியான நிலைய நிர்வாகி செல்வமுத்துக்குமரன் தலைமை தாங்கினார். தி.மு.க., நகர செயலாளர் ஜீவா, முருகா மருத்துவமனை டாக்டர் சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினர். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை, நேர்மறையான எண்ணங்கள், தற்கொலையில் இருந்து விடுபடுதல், ஞான விளக்கம் உள்ளிட்ட தியான பயிற்சி அளிக்கப்பட்டது. தினமும் காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரையும், இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரையும் இலவச தியான பயிற்சி அளிப்பதாக செல்வமுத்துக்குமரன் கூறினார்.