கோவை கோதண்டராம ஸ்வாமி கோவிலில் மகாமந்திர அகண்ட நாமம், சத்சங்கம்
ADDED :2 days ago
கோவை; கோவை, ராம் நகர் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவிலில் மகாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையொட்டி மகாமந்திர அகண்ட நாமம் மற்றும் சத்சங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வானது காலை 11.30மணி முதல் இரவு 7.30மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியின் மாலை நிகழ்வாக 5.30மணி முதல் 6.30மணி வரை பக்தர்களின் சத்தங்க அனுபவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து குரு மகிமை பிரவசனம் என்ற தலைப்பில் ஸ்ரீ சுவாமி ஜெயின் சீடர்களான எம். கே. ராமானுஜம் மற்றும் பரத் ஆகியோரின் சொற்பொழிவு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவுபிரசாதமாக கொடுக்கப்பட்டது.