உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஞான வேள்வி

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஞான வேள்வி

உடுமலை: செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு அலங்கார பூஜைகளும், ஞான வேள்வியும் நடைபெற்றது.உடுமலை செல்லப்பம்பாளையத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.தர்ம ரக்ஷன சமதி சார்பில், சரஸ்வதி நாம ஞான வேள்வி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று, குழந்தைகள், பாராயணம் செய்தனர்.ஸ்ரீ பிரம்மா, சரஸ்வதி சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !