உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகாய அன்னை தேர்த்திருவிழா

சகாய அன்னை தேர்த்திருவிழா

மேட்டுப்பாளையம் அருகே உள்ள, இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நடந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் வெல்ஸ்புரத்தில், இடைவிடா சகாய அன்னை ஆலயம் உள்ளது. இதன் தேர் திருவிழா கொடியேற்றம் கடந்த வாரம் பங்கு பாதிரியார் பிலிப் தலைமையில் நடந்தது.நல்லாயன் குருமட விவிலிய பேராசிரியர் பாதிரியார் டேவிட் ஜான் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றி, வேண்டுதல் தேர் பவனியை துவக்கி வைத்து, கொடியேற்றி வைத்தார். நான்கு நாட்கள், மாலை 6:00 மணிக்கு ஆரோக்கியசாமி, ஞானப்பிரகாசம், பிச்சைமுத்து, லியோ ஆகிய பாதிரியார்கள், நவநாள் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றினர்.தேர்த் திருவிழா கூட்டு திருப்பலியை, பாதிரியார் பிலிப் தலைமையில், ஈரோடு சீமா சமூகப் பணி மைய இயக்குனர் பாதிரியார் ரொசாரியோ வினோத், நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு அன்னையின் தேர் பவனியும் நடைபெற்றது.ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அன்னையின் அலங்கார தேர், வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள பஸ் ஸ்டாப் வரை சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.முடிவில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.பாளையம் அருகே உள்ள, இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நடந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் வெல்ஸ்புரத்தில், இடைவிடா சகாய அன்னை ஆலயம் உள்ளது. இதன் தேர் திருவிழா கொடியேற்றம் கடந்த வாரம் பங்கு பாதிரியார் பிலிப் தலைமையில் நடந்தது.நல்லாயன் குருமட விவிலிய பேராசிரியர் பாதிரியார் டேவிட் ஜான் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றி, வேண்டுதல் தேர் பவனியை துவக்கி வைத்து, கொடியேற்றி வைத்தார். நான்கு நாட்கள், மாலை 6:00 மணிக்கு ஆரோக்கியசாமி, ஞானப்பிரகாசம், பிச்சைமுத்து, லியோ ஆகிய பாதிரியார்கள், நவநாள் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றினர்.தேர்த் திருவிழா கூட்டு திருப்பலியை, பாதிரியார் பிலிப் தலைமையில், ஈரோடு சீமா சமூகப் பணி மைய இயக்குனர் பாதிரியார் ரொசாரியோ வினோத், நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு அன்னையின் தேர் பவனியும் நடைபெற்றது.ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அன்னையின் அலங்கார தேர், வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள பஸ் ஸ்டாப் வரை சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.முடிவில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !