செல்லிஅம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :104 days ago
முதுகுளத்துார் நகர் தேவர் உறவின்முறை சார்பில் செல்லிஅம்மன் கோயில் பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது.
இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும்,பெண்கள் கும்மி அடித்தும் வந்தனர்.
பொங்கல் பெட்டி ஊர்வலமாக துாக்கி சென்று கோயில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி துாக்கி பஜார், அய்யனார் கோயில், செல்லி அம்மன் கோயில் உட்பட முக்கிய வீதியில் ஊர்வலமாக சென்று தண்ணீரில் கரைத்தனர். கலைநிகழ்ச்சி நடந்தது.