முளையூர் முத்தாலம்மன் கோயில் திருவிழா; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :12 hours ago
நத்தம்; நத்தம் அருகே முளையூர் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் அக்.2 இரவு அலங்கரிக்கப்பட்ட முத்தாலம்மன் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வர கண் திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்துதல், மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.