கும்பாபிஷேகம் நடந்து 8 மாதங்களில் உடைந்த கோவில் கலசங்கள்
ADDED :1 days ago
வந்தவாசி; திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வென்குன்னறம் கிராமத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோயில் புனரமைக்கப்பட்டு, பிப்., 16ல், கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயில் புனரமைப்பு பணிகள் தரமற்ற முறையில் செய்யப்பட்டதால் கோபுரத்தில் உள்ள இரு கலசங்கள் உடைந்து விழுந்தன. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள தரைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளன. மின் ஒயர்கள் செல்லும் குழாய்கள் உடைந்த நிலையில் உள்ளன. 8 மாதங்களில் புனரமைப்பு செய்யப்பட்ட பல இடங்கள் சேதமடைந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.