முத்தங்கி அலங்காரத்தில் அரியக்குடி திருவேங்கடமுடையான் அருள்பாலிப்பு
ADDED :8 hours ago
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி துவாதசி திதி மற்றும் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முத்தங்கி அலங்காரத்தில் அலமேலு மங்கை தயாருடன் சீனிவாசபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புரட்டாசி சனிக்கிழமை விழாவை முன்னிட்டு மாணவிகளின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.