உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூரப்பனுக்கு சந்தன அபிஷேகம்!

குருவாயூரப்பனுக்கு சந்தன அபிஷேகம்!

குருவாயூர்: ஆண்டுக்கொருமுறை மட்டுமே நடக்கும், குருவாயூர் கிருஷ்ணனுக்கான சந்தன அபிஷேக நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஆண்டுக்கொருமுறை, மூலவருக்கு சந்தன அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். பிற தினங்களில், சந்தனக் காப்பு மட்டுமே நடைபெறும். சந்தன அபிஷேக நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக, கோழிக்கோடு சாமூதிரி மன்னர் குடும்பத்தினர், பரம்பரை பரம்பரையாக நடத்தி வருகின்றனர்.இதற்கான சந்தனக் கலவையில், காஷ்மீரில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட குங்குமப்பூ, மைசூர் சந்தனம், பச்சை கற்பூரம், பன்னீர், கஸ்தூரி ஆகியவை சேர்க்கப்படும். இவ்வாறு தயாரித்த சந்தனக் கலவை தங்கக் குடத்தில் நிரப்பி, சன்னதிக்கு முன்மண்டபத்தில் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன.பின், உச்சிக்கால பூஜைக்கு முன், மூலவருக்கு சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !