நல்லதே நடக்கும்
ADDED :1 days ago
மதுரை கூடலழகர் கோயில் திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு உள்ள அஷ்டாங்க விமானம் 125 அடி உயரம் கொண்டது. பிரமாண்டமாய் காட்சி தரும் இதை பார்த்தாலே நிம்மதி கிடைக்கும். மகிழ்ச்சி பெருகும். வாழ்வு சிறக்கும். இதை மனம், மொழி, மெய்களால் துாய்மையுடன் வலம் வந்தால் செயல்கள் யாவும் வெற்றி பெறும். நான்கு யுகங்களாக இந்த விமானத்தின் கீழ் இருக்கும் பெருமாளை வழிபட்டு புகழ் அடைந்தவர்களை கீழ்க்கண்ட பாடல் வரிசைப்படுத்துகிறது. பெருமாளை நினைத்து பின்வரும் பாடலை பாட நல்லதே நடக்கும்.
வில்லாண்ட வடவரையான் மணம் புணர
அட்டாங்க விமான மென்னும்
இல்லாண்டு புயன் கனகன் காசிபனார்
பிருகு அம்பரீடன் கூடல்
தொல்லாண்ட புருவரசு மலயகேதனன்
முதலோர் தொழப் புத்துாரான்
பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட
தோளன்அடி பணிதல் செய்வாம்.