நெஞ்சினிலே...
ADDED :1 days ago
சாரதாதேவியாரை சந்திக்க வந்தாள் பெண் ஒருத்தி. அன்புக் காணிக்கையாக தேவியாரின் படத்தை கொடுத்தாள். அதை தொட்டு கண்களில் ஒற்றி விட்டு பீடத்தின் மீது வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் தேவியார்.
“தாயே! உங்கள் படத்தை நீங்களே வணங்குவது சரியா?” எனக் கேட்டாள்.
“என்னை நானே உயர்த்திக் கொள்ள இப்படி செய்யவில்லை. பகவான் ராமகிருஷ்ணர் என் நெஞ்சில் குடியிருக்கிறார். அதே போல இந்தப் படத்திலும் என் நெஞ்சம் இருக்கிறதல்லவா! அதிலும் பகவானே வாழ்கிறார் என்பதால் வணங்கினேன்” என்றார்.