உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாயாகுளம் மங்களேஸ்வரி அம்மனுக்கு முளைக்கொட்டு உற்ஸவம்

மாயாகுளம் மங்களேஸ்வரி அம்மனுக்கு முளைக்கொட்டு உற்ஸவம்

கீழக்கரை; கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு மங்களேஸ்வரி நகரில் 9ஆம் ஆண்டு முளைக்கொட்டு உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் செல்வ விநாயகர், மங்களேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்தது. இரவில் பெண்களின் கும்மியாட்டமும், ஆண்களின் ஒயிலாட்டமும் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் மங்கேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சக்தி கரகம் கிராமத்தைச் சுற்றிலும் வீதி உலா வந்தது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று மாலை 4:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முத்தரையர் உறவின்முறை சங்கம் மற்றும் கிழக்கு மங்களேஸ்வரி நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !