பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை திருப்பாவாடை உற்சவம்
ADDED :46 days ago
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.
புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீவாரி வேங்கடாஜலபதிக்கு, நாளை (9ம் தேதி) காலை 7:00 மணி முதல், வைகானஸ ஆகம முறைப்படி திருப்பாவாடை உற்சவம், நேத்ர தரிசன சேவை நடக்கிறது. அப்போது, புளியோதரை பிரசாதத்தால் ஸ்ரீவாரி வேங்கடாஜலபதியை உருவகப்படுத்தி மாலைகள் அணிவித்து, பட்சணம் மற்றும் பழங்கள் சமர்ப்பித்து வேதபாராயணங்கள், ஸ்ரீநிவாச கத்யம் முழங்க விசேஷ திருவாராதனை மற்றும் சாற்றுமுறை நடக்கிறது. வரும் 11ம் தேதி புரட்டாசி நான்காம் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது.