உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் சிறப்பு வழிபாடு

கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் வெங்கடேச பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்த மூலவர் . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல், புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமை திருப்பூர் மாவட்டம் தாளக்கரை பகுதியில் உள்ள லஷ்மி நரசிம்மர் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் உற்சவர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !