இளமநாயகி அம்மன் கோயில் விழா; பால்குடம் எடுத்த பக்தர்கள்
ADDED :105 days ago
மேலூர்; அ.வல்லாளபட்டி நாகரம்மாள் இளமநாயகி அம்மன் கோயில் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் கோயிலில் இருந்து பால்குடம், பூத்தட்டு எடுத்து வெள்ளி மலையாண்டி கோயிலுக்கு சென்றனர். அங்கு சுவாமி கும்பிட்ட பிறகு மீண்டும் கோயிலுக்கு திரும்பினர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.அதனைத் தொடர்ந்து மூவாயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.