உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண் பார்வை கிடைக்க...

கண் பார்வை கிடைக்க...

வேதாரண்யம் சிவன் கோயில் கருவறையில் அணைய இருந்த விளக்கு எலியின் வால் பட்டதால், துாண்டப்பட்டது. அந்த எலியே மறுபிறவியில் பலிச்சக்கரவர்த்தியாக அசுர குலத்தில் பிறந்தது. அவரிடம் மூன்றடி மண்ணை தானமாக கேட்டார் வாமனராக அவதரித்த மகாவிஷ்ணு. பலிசக்கரவர்த்தியும் தருவதாக சம்மதித்தார். வந்திருப்பவர் மகாவிஷ்ணு என்பதை அறிந்த அசுரர்களின் குலகுருவான சுக்கிராச்சாரியார் தானத்தை தடுக்க எண்ணினார். அதற்காக வண்டு வடிவெடுத்து பலியிடம் இருந்த தீர்த்த பாத்திரத்தின் வாய்ப்பகுதியை அடைத்தார்.  சுக்கிராச்சாரியாரின் தந்திரத்தை அறிந்த வாமனர், தர்ப்பையால் தீர்த்தம் வரும் வாய்ப்பகுதியை குத்தினார். வண்டாக அதில் அடைத்திருந்த சுக்கிராச்சாரியாரின் பார்வை பறி போனது. இழந்த பார்வையை மீண்டும் பெற சென்னை மயிலாப்பூர் அருகிலுள்ள வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டு இழந்த பார்வையைப் பெற்றார். கண்நோய் உள்ளவர்கள் இவரை ஞாயிறு, திங்களன்று குரு ேஹாரையில் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !