உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேத மந்திரங்கள்

வேத மந்திரங்கள்

நாம் எழுப்பும் ஒலிகள் அழிவதில்லை. அதாவது ஓர் ஒலி உண்டான பின் என்றும் அழியாமல் ஆகாயத்தில் இருக்கும். வேத மந்திரங்களுக்கும், ஒலிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. வேத மந்திரம் ஒவ்வொன்றும் ஆதியில் உண்டான ஒலியை வைத்து ஏற்பட்டவை. ஆதியும் அந்தமும் அற்ற கடவுள் ஒலியின் மூலம்தான் இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்தார். அதாவது உலகை உருவாக்கிய பிரம்மா உண்டானவுடன் அவருடைய இதயத்தில் வேதஒலிகள் தோன்றின. இந்த பூமியை உருவாக்க அந்த வேதம் அவருக்கு வழிகாட்டியது. எங்கே பார்த்தாலும் வேத சப்தம் நிறைந்திருந்ததை அவர் அறிந்தார். ஆனால் ரிஷிகளுக்குச் சிலச்சில மந்திரங்களே தோன்றும். இப்படி பெற்ற மந்திரங்கள்தான் நமக்கு கிடைத்த வேதமாக இருக்கிறது. நமக்கு கிடைத்ததுள்ள ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களே குறைவுதான் என்றே சொல்ல வேண்டும். இதை ‘அனந்தா வை வேதா:’ – வேதங்களுக்கு அளவே இல்லை’ என்கிறது வேதம். ஆனால் இம்மை, மறுமை, உலக நன்மைக்கும் இந்த வழிபாடு போதும். வேதங்களை சொல்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதன் மூலம் எதிர்பாராத நன்மைகள் கிடைப்பதை  உணரலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !