முள்ளிமுனை பத்ரகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :113 days ago
தொண்டி; தொண்டி அருகே முள்ளிமுனையில் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா செப்.,30 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். அதன்பின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கடலில் கரைத்தனர். அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.