உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை புரட்டாசி நான்காம் சனிக்கிழமை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியுள்ளது; பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு மேலும் 3 கிலோ மீட்டர் வரை வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நாளை மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !