உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி திருஆவினன்குடி கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் வெள்ளிக்கதவு

பழநி திருஆவினன்குடி கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் வெள்ளிக்கதவு

பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு வெள்ளித்தகடுகள் பதிக்கப்பட்ட புதிய கதவு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் பொருத்தப்பட்டது.

பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அர்த்தமண்டப வாயிலில் இரட்டை மரக்கதவு, நிலை வாசலில் வெள்ளித்தகடுகள் பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டு இருந்தன. அவை தற்போது பழுதடைந்துள்ளது. தற்போது கோயில் கும்பாபிஷேக பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் அர்த்தமண்டப நிலை வாசல், மரக்கதவுகளில் பதிக்கப்பட்ட வெள்ளி தகடுகளை புனரமைக்கும் பணி அக்.,9ல் துவங்கியது. பழைய வெள்ளித் தகடுகள் அகற்றப்பட்டன. அப்போது கதவின் மரம் பழுதுபட்டிருந்தது. அதனை சரி செய்து புதிய கதவு உருவாக்கப்பட்டு அதில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 12 கிலோ வெள்ளியை பயன்படுத்தி தகடுகள் பதிக்கப்பட்டன. இந்த வெள்ளியை கரூரைச் சேர்ந்த முருக பத்தர் ஒருவர் வழங்கினார்.

அதிகாலை 4:00 மணிக்கு விளா பூஜை நடந்தது. புணராவாஹனம் செய்யப்பட்டு, கலசநீரை சன்னதி பிரகாரத்தில் எடுத்து வநதுத புதிய வெள்ளி கதவுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் வெள்ளிக்கதவு திறக்கப்பட்டு சன்னதிக்குள் இருந்த குழந்தை வேலாயுதசுவாமி, சந்திரமவுலீஸ்வரர், சாரதாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்துவிடம் வெள்ளிக்கதவின் சாவி வழங்கப்பட்டது. உதவி கமிஷனர் லட்சுமி, கண்காணிப்பாளர் ராஜா மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !