உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி மழைச்சோறு எடுத்த அரசூர் கிராம மக்கள்

மழை வேண்டி மழைச்சோறு எடுத்த அரசூர் கிராம மக்கள்

சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.


சூலூர் அடுத்த அரசூர் கிராமத்தில் மழை வேண்டி மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபாடு நடத்தி இறைவனை வேண்டுவது வழக்கம். பெண்கள், சிறுமிகள் தலையில் மூங்கில் கூடை களை சுமந்து வீடு, வீடாக சென்று வடித்த சோற்றை பெற்று மேள, தாளத்துடன் ஊர்வலமாக வந்தனர். கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, சோற்றை படையல் இட்டு இறைவனை மழை வேண்டி வேண்டினர். பெண்கள் கும்மியடித்து பாடல்களை பாடினர். தொடர்ந்து, விநாயகர் கோவிலில் விநாயகருக்கு, 108 குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதுகுறித்து பெண்கள் கூறுகையில், முன்னோர் காலங்களில் மழைச்சோறு எடுத்து இறைவனை வழிபட்டால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை .அதை பின்பற்றி நாங்கள் மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபாடு நடத்தினோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !