திருவாவடுதுறை ஆதீன மடத்தில் திருப்பனந்தாள் காசி மடாதிபதி ஆசி
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் வருகை தந்து, நமச்சிவாய மூர்த்திகள் சன்னதியில் தரிசனம், மடாதிபதியுடம் ஆசி பெற்றார்.
திருப்பனந்தாளில் அமைந்துள்ள பழமையான காசி மடத்தின் 21வது அதிபராக பதவி வகித்த ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சமீபத்தில் முக்தி அடைந்தார் இதனைத் தொடர்ந்து 22 ஆவது அதிபராக ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற காசி மடத்து அதிபர், மரியாதை நிமித்தமாக இன்று திருவாவடுதுறை ஆதின மடத்திற்கு வருகை தந்து, ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளிடம் ஆசி பெற்றார். அவருக்கு மடத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நமச்சிவாய மூர்த்திகள் சன்னதியில் காசிவாசி ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.