உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

திண்டிவனம்; ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.


திண்டிவனம், இளுப்பத்தோப்பு ராஜாம்பேட்டை வீதியில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகா கால பைரவர்க்கு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து  சந்தனகாப்பு அலங்காரமும், மகா தீபாரதனையும் நடந்தது.  அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய தலைவர் அன்னை சந்தானம் செய்திருந்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !