உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை அருவிக்கு செல்ல தடை; தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி

திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை அருவிக்கு செல்ல தடை; தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி

உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது.


உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில் நேற்று, வானம் மேக மூட்டத்துடனும், அவ்வப்போது மழை பெய்தும் வந்தது. இதனால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருந்ததால், நேற்று காலை முதலே, சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடந்தன. மும்மூர்த்திகளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !