திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு
ADDED :13 minutes ago
திருப்புத்தூர்; திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு நடந்தது. தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சக்கரத்தாழ்வார், நரசிம்மர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர், உற்ஸவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.