விழுப்புரத்தில் தீபாவளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :8 minutes ago
விழுப்புரம்: தீபாவளி பண்டிகை தினத்தில் விழுப்புரத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தீபாவளியையொட்டி, காலை 6:00 மணிக்கு, விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பொதுமக்கள் குடும்பத்துடன் வழிபட்டனர். அதே போல், ரயிலடி விநாயகர் கோவிலிலும், ராஜகணபதி கோவிலிலும், வீரவாழி மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அந்தந்த பகுதிகளில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.