உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்

மயிலாடுதுறை ; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து மாயூரநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் யானை அபயாம்பிகையிடம் ஆசிர்வாதம் பெற்றனர்:-  ரூபாய் 20 ஆயிரம் மதிப்பீல் யானைக்கு புத்தாடையை பக்தர்கள்  அணிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடை அணிந்து வழிபாடு மேற்கொண்டு கோயில் யானை அபயாம்பிகையிடம் ஆசிர்வாதம் பெற்றனர். திருவாரூரை சேர்ந்த விஜயபாஸ்கர் என்ற பக்தர் யானைக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பில் ஆடை மற்றும் நெத்திபட்டம் வழங்கி யானைக்கு அணிவித்தார். தொடர்ந்து ஶ்ரீமகாகணபதி மற்றும் யானை அபயாம்பிகைக்கு தீபாரதனை செய்யப்பட்டது. ஏராளமானோர் வழிபாடு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !