உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொடர் மழைக் காரணமாக கோவில் கோபுரம் இடிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி

தொடர் மழைக் காரணமாக கோவில் கோபுரம் இடிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி

சிறுபாக்கம்; சிறுபாக்கம் பகுதியில் பெய்த தொடர் மழைக் காரணமாக பிரசித்தி பெற்ற கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது.


சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடியில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு, சேலம், ஆத்தூர், நாமக்கல், கடலூர், பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர்களின்‌ குல தெய்வமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவில் புனரமைப்பு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற‌‌‌ கிராமங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடியில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் செல்லியம்மன் கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது. இன்று காலை இதனையறிந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !