உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுபாக்கம் அருகே இடிந்து விழுந்த கோவில் கோபுரம்; அமைச்சர் ஆய்வு

சிறுபாக்கம் அருகே இடிந்து விழுந்த கோவில் கோபுரம்; அமைச்சர் ஆய்வு

சிறுபாக்கம்; சிறுபாக்கம் அருகே தொடர் மழைக் காரணமாக பிரசித்தி பெற்ற கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததை அமைச்சர் பார்வையிட்டார்.


சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற‌‌‌ கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முழுவதும் பெய்த மழையால், சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடியிலுள்ள ஆண்டவர் செல்லியம்மன் கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது. இதனால், அப்பகுதி பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையறிந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், இன்று கோவில் கோபுரம் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்டார். மேலும், கோவில் இடிந்து விழுந்தது குறித்து முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரிடம் முறையிட்டு கோவிலை சீரமைத்து குடை முழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அப்போது, வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், வேல்முருகன், ம.தி.மு.க., ஒன்றிய செயலர் சம்பத்குமார், முன்னாள் மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், வி.ஏ.ஓ., விஷ்ணுராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !