உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்த சஷ்டி விழா; சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் சுவாமி திருவீதி உலா

கந்த சஷ்டி விழா; சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் சுவாமி திருவீதி உலா

திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு விரதத்தை தொடங்கினர். மாலை சுப்பிரமணிய சுவாமி மலை மேல் இருந்து அடிவாரத்திலுள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார்‌. விழாவின், 2வது நாளாக நேற்று காலை மற்றும் மாலையில் அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சப்பரத்தில் சுப்ரமணியசுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வரும் 27ம் தேதி சூரசம்ஹாரம், 28ம் தேதி திருக்கல்யாண உற்சவம் ஆகியன நடைபெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !