மதுரை, வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :19 hours ago
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் உபகோயிலான மதுரை வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 3 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுதல் உட்பட ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்தன. நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. பெருமாள், கனகவல்லி தாயார், நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.