உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா; தீம் பாடல் வெளியீடு

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா; தீம் பாடல் வெளியீடு

ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற சாய்பாபாவின் அறிவுரைக்கு ஏற்ப, நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்க, ஸ்ரீசத்ய சாய் சேவா முடிவு செய்துள்ளது. நுாற்றாண்டு விழாவின் இறுதி நாளான, நவ., 23ல், புட்டபத்தி, பிரசாந்தி நிலையத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட உள்ளனர். ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில், நவ., 23ம் தேதி வரை, மரக்கன்று நடுதல், ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்கள், கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 100வது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ஷத வர்ஷ ஜன்மோத்ஸவம் தீம் பாடல் வெளியிட்டுள்ளது பிரசாந்தி நிலையம். சாய்பாபாவின் பிறப்பின் மகத்துவம், யுகத்தின் அவதார நோக்கம் பற்றிய இந்த பாடல் சமஸ்கிருத மொழியில் 3:25 நிமிடம் உள்ளது. தெய்வீக நூற்றாண்டு விழா நெருங்கி வரும் இந்நேரத்தில் வெளியீடப்பட்டு்ள்ள இந்த பாடல் சாய்பாபா பக்தர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.


Link; https://www.youtube.com/watch?v=0zCcWmm3KR8


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !