அழகர்கோவில்: சஷ்டி கவசம் பாடிய பள்ளி மாணவிகள்
ADDED :24 minutes ago
அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில்கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு நேற்று கோயில் வளாகத்தில், அழகர்கோவில் சுந்தரராஜா பள்ளி மாணவிகள் 150 பேர் கூட்டாக கந்த சஷ்டி கவசத்தை இசையுடன் பாராயணம் செய்தனர். மாணவிகளுக்கு, பள்ளி இசை ஆசிரியை ஷர்மிளா அறிமுகப் பயிற்சி அளித்தார்.
தலைமையாசிரியர் செல்வராஜ் மேற்பார்வையில், கும்பகோணம் சங்கீத வித்வான் மணிகண்டன் 15 நாட்கள் பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் செய்திருந்தார்.