கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் சிங்கமுக சூரன் வதம்
ADDED :1 days ago
புதுச்சேரி: கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், 73ம் ஆண்டு, கந்த சஷ்டி சூரசம்ஹார, திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவையொட்டி, சிங்கமுக சூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி, சுப்பையா சாலை, ரயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவில் 73ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார, திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா, கடந்த 22ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை முருகப்பெருமான், சிங்கமுக சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் வழிப்பட்டனர். முக்கிய நிகழ்வாக இன்று (27ம் தேதி) சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.