உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 11 அடி உயர ஜெய வீர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா

11 அடி உயர ஜெய வீர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் வாராஹி பீடம், ஷண்மதாலயம் மடத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நவசக்தி மகா வராஹி அம்மன் கோவில் வளாகத்தில், 11 அடி உயர ஜெய வீர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.


விழாவை ஒட்டி கடந்த, 25ம் தேதி மாலை கும்ப கலச தீர்த்தம், கோபுர கலசம் ஆகியன ஊர்வலமாக கூடலூர் கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கோபுர கலச ஸ்தாபனம் முதல் கால வேள்வி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. 26ம் தேதி காலை, 7.00 மணிக்கு இரண்டாம் காலம், மூன்றாம் கால யாக வேள்விகளும், மாலை, 7.00 மணிக்கு ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயர் அஷ்டபந்தனம், யந்திர ஸ்தாபனம் நடந்தது. நேற்று காலை, 6.00 மணிக்கு நான்காம் கால வேள்வி, ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு நாடி சந்தானம், கலச யாத்திரை நடந்தது. தொடர்ந்து, 9.00 மணிக்கு கோபுர கலச கும்பாபிஷேகம், தொடர்ந்து அபிஷேக அலங்காரம், தச தரிசனம் ஆகியன நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து இருந்தனர். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !