உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் துாய்மை பணி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் துாய்மை பணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பண்ருட்டி திருத்துறையூர் அகடவல்லி திருநாவுக்கரசர் உழவாரப் பணி திருத்தொண்டர் குழுவினர் நேற்று துாய்மை பணி மேற்கொண்டனர். பண்ருட்டி வட்டம், திருத்துறையூர், அகடவள்ளி திருநாவுக்கரசர் உழவாரப் பணி குழு, 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுதும், 400க்கும் மேற்பட்ட சைவம், வைணவ கோவில்களில் துாய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று துாய்மை பணி மேற்கொண்டனர். இதில் கோவில் பிரகாரங்களில், பக்தர்கள் தீபம் ஏற்றியபோது தரையில் கசிந்திருந்த எண்ணெய் பசையை, துாய்மை பணி மேற்கொண்டவர்கள், தண்ணீர் வாயிலாக சுத்தம் செய்தனர். வெளிப்பிரகாரங்களில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !