கனவை நனவாக்கும் முருகன்!
ADDED :4770 days ago
நீலகிரி மஞ்சூர் தண்டபாணி கோயிலில் முருகப்பெருமானுக்கு வித்தியாசமான முறையில் தினமும் அலங்காரம் செய்கிறார்கள். தனக்கு என்ன அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை, முந்தையநாள் இரவே அந்தக் கோயில் குருக்கள் கனவில் முருகப்பெருமான் தோன்றி செல்லிவிடுகிறாராம். அதன்படி, தினமும் இங்குள்ள முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம், ஆண்டி ஆலங்காரம், சர்வ அலங்காரம்... என்று ஒவ்வொரு அலங்காரத்தையும் செய்து மகிழ்கிறார்கள்.