உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று திருவோண விரதம், கோஷ்டாஷ்டமி; கோ பூஜை செய்து வழிபட 16வகை செல்வங்களையும் பெறலாம்!

இன்று திருவோண விரதம், கோஷ்டாஷ்டமி; கோ பூஜை செய்து வழிபட 16வகை செல்வங்களையும் பெறலாம்!

கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் வரக்கூடிய இவ்விழா, இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் இன்று (29ம் தேதி) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் வாழ்ந்த துவாபர யுகத்தில் இருந்தே கொண்டாடிய விழா இது. பசுவின் பவித்ரமான தேகத்தில் 33 கோடி தேவர்களும் வாசம் செய்வதாக நம்பிக்கை. பசுவை தெய்வமாகப் போற்றுவது நம் மரபு. பசுவின் உடலில் ஈரேழு பதினான்கு உலகங்களும் அடங்கியுள்ளன. காலையில் எழுந்ததும் மங்கள ரூபியான பசுவைத் தரிசித்தால் துன்பங்கள் மறையும். தினமும் கோபூஜை செய்பவர் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்று மகிழ்வர். இன்று கோஷ்டாஷ்டமியான கன்று சேர்த்து பசுவை வழிபட்டால் சர்வ மங்களமும் கிடைக்கும்.  


ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான நாள். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபட சந்திர தோஷம் நீங்கும். பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட நிம்மதியான வாழ்வு அமையும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். இன்று  திருவோண நட்சத்திர நாளில்பெருமாள், கோ பூஜை செய்து வழிபட பதினாறு வகையான செல்வங்களையும் பெறலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !