முத்துமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
                              ADDED :6 hours ago 
                            
                          
                          
கோவை; ஐப்பசி மாதம் இரண்டாவது வெள்ளிகிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் வி. என் தோட்டம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மஞ்சள் பட்டு வஸ்திரத்தில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.