உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ சுவாமி கோயிலில் அத்தி மர வரதராஜ சுவாமி சிலை பிரதிஷ்டை

காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ சுவாமி கோயிலில் அத்தி மர வரதராஜ சுவாமி சிலை பிரதிஷ்டை

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான  பிரசன்ன வரதராஜ சுவாமி கோயிலில் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட வேண்டிய கட்டுமானப் பணிகளை பல்வேறு காரணங்களால் முடிக்க இயலவில்லை. இந்த நிலையில் பாலாலயம் ஏற்பாடு செய்த சுவாமி உருவப் படம் உள்ள இடத்தில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதராஜ சுவாமி சிலையை ஜலாதிவாசம் செய்தப் பிறகு, ஷோடஷாபிஷேகம் செய்யப்பட்டது. 


இது குறித்து கோயில் அர்ச்சகர் ஸ்ரீனிவாசாச்சாரியார் கூறுகையில்; பாலாலயத்தின் போது சுவாமியை உருவப் படத்திற்குள் ஆஹ்வானம் செய்ததுப் போல் தற்போது உருவப் படத்தில் இருந்து சுவாமியை மர சிலைக்கு பாலாலயம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு வேத மந்திரங்களுடன் சிறப்பு அபிஷேகங்களும் ஹோமங்களும் செய்யப்பட்டதாக  கூறினார்.  இன்று வெள்ளிக்கிழமை சிலைக்கு பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் நடைபற்றன. இந்த நிகழ்வுகளில்  எம்.எல்.ஏ பொஜ்ஜல.  சுதிர் ரெட்டி, சிவன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கொட்டே. சாய் பிரசாத், பாஜக மாநில துணைத் தலைவர் கோலா ஆனந்த் , கோயில் செயல் அதிகாரி பாபி ரெட்டி, துணை செயல் அலுவலர் என்.ஆர். கிருஷ்ணா ரெட்டி, மோகன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில், மீண்டும் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஷோடஷ அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !