வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தரிசனம்
உத்தரபிரதேசம், துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக, வாரணாசிக்கு வந்த துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற துணை ஜனாதிபதி, யோகி ஆதித்யநாத்துடன் அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் நிர்வாக சங்கத்தால் கட்டப்பட்ட புதிய சத்திரத்தை திறந்து வைத்தார். 140 அறைகளைக் கொண்ட 10 மாடி சத்திரம், வாரணாசியில் சங்கத்தால் கட்டப்பட்ட இரண்டாவது சத்திரமாகும். இது காசிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பழமையான ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்பை பிரதிபலிக்கிறது.