ஐப்பசி சனி, ஏகாதசி விரதம்; பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :320 days ago
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சந்தன காப்பு அபிஷேகத்தில் மூலவர் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.