ஒதியத்துார் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
                              ADDED :14 hours ago 
                            
                          
                          
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று காலை 6:00 மணி க்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து மகா பூர்ணாஹூதி யாகம், மூலமந்திர ஹோமம் நடந்தது. 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி சுந்தர விநாயகர், அங்காள பரமேஸ்வரி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இரவு மாரியம்மன் வீதியுலா நடைபெறுகிறது. ஒதியத்துார், கீழ்வாலை, மேல்வாலை, கண்டாச்சிபுரம் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்திருந்தனர்.