உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வடபத்ரசாயி ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வடபத்ரசாயி ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி சன்னதியில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு உற்சவரான பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் செய்யப்பட்டு புறப்பாடு நடந்தது. அப்போது பல்லக்கில் எழுந்தருளிய பெரிய பெருமாளை பக்தர்கள் ஊஞ்சல் போல் ஆட்டி அசைத்து கோயில் மேல் தளத்தில் உள்ள பிரகாரத்தில் மும்முறை சுற்றி வந்து கோபால விலாசத்தில் எழுந்தருள செய்தனர். பின்னர் ஸ்ரீதேவி, பூமாதேவி தாயார்களும் பங்கேற்க ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !