உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜென்மாஷ்டமி விழா; மகா பைரவர் கோவிலில் மாலை அணியும் வைபவம்

ஜென்மாஷ்டமி விழா; மகா பைரவர் கோவிலில் மாலை அணியும் வைபவம்

அன்னூர்; வருகிற 12ம் தேதி ஜென்மாஷ்டமி விழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.


மொண்டிபாளையம் செல்லும் வழியில் திம்மநாயக்கன்புதூரில் உள்ள பைரவர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் வரும் அஷ்டமியன்று ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஜென்மாஷ்டமி விழா வருகிற 12ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்கும் வைபவம் நடைபெற உள்ளது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மகா பைரவர் கோவிலில் 23 பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். எட்டு நாட்கள் விரதம் இருந்து 12ம் தேதி ஜென்மாஷ்டமியன்று நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கின்றனர், மாலை அணியும் வைபவத்தை முன்னிட்டு பைரவருக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !