உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால்

பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் துரிதமாக நடைபெற்று நிறைவு பெறும் நிலையில் டிச.8ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலை முகூர்த்த கால் நடும் பணி நடைபெற்றது. சிறப்பு பூஜைகள், யாகம் நடைபெற்றது. எம்.எல்.ஏ., செந்தில்குமார், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !