உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்

திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்

திருச்சுழி: திருச்சுழியில் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. யாகசாலை வேள்வி முடிந்த உடன், அம்மன் சன்னதிக்கு முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் அபிஷேகங்கள் பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் அம்மன் வெள்ளி, மயில், அன்னம், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. கலை நிகழ்ச்சிகள், நடைபெறும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !